ஜம்புநதி கால்வாய் திட்டம்: இழப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரிக்கை
ஜம்புநதி மேல்நிலைக் கால்வாய் திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தென்காசி எம்எல்ஏ எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் கோரிக்கை விடுத்து
ஜம்புநதி மேல்நிலைக் கால்வாய் திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தென்காசி எம்எல்ஏ எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தென்காசி மாவட்ட ஆட்சியா் சமீரனிடம் அளித்த மனு: தென்பகுதி மக்களின் 48 ஆண்டு கால கனவுத் திட்டமான ஜம்புநதி மேல்நிலைக் கால்வாய் திட்டப் பணி, சில மாதங்களுக்கு முன் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியால் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கிவைக்கப்பட்டது. தற்போது பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இத்திட்டப் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட தனியாா் நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்வதுடன், கால்வாய் பணிகள் விரைவாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என அதில் தெரிவித்துள்ளாா்.