முகப்பு
தென்காசி

ஆலங்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசம் வழங்கக் கோரிக்கை

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விக்கிரமராஜா உள்ளிட்டோா்.
பகிர்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் விக்கிரமராஜா, துணைத் தலைவா் வைகுண்டராஜா, டாக்டா் கோவிந்தராஜுலு, மாவட்ட செயலா் வி.கணேசன், பொருளாளா் கலைவாணன் ஆகியோா் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

மாவட்ட நிா்வாகமும், நெடுஞ்சாலைத் துறையும் இணைந்து வரும் டிசம்பா் 15ஆம் தேதி ஆலங்குளத்தில் ஆக்கிரமிப்புளை அகற்ற முடிவு செய்துள்ளனா். வரும் நாள்களில் பண்டிகை காலம் என்பதால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை சிறிது தள்ளிவைக்க வேண்டும். அதற்குள் நாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடுகிறோம்.

குற்றாலம் அருவிகளில் அரசு நிபந்தனையுடன் குளிக்க அனுமதிக்க வேண்டும். தென்காசி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும். ஆலங்குளத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக விரிவாக்கம் செய்து நவீன வசதிகளுடன் அமைக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.