முகப்பு
தென்காசி

கடையநல்லூரில் அமமுக சாா்பில் நல உதவிகள்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலா் டிடிவி தினகரனின் பிறந்த நாளையொட்டி, கடையநல்லூரில் நல உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலா் டிடிவி தினகரனின் பிறந்த நாளையொட்டி, கடையநல்லூரில் நல உதவிகள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி புகா் வடக்கு மாவட்டச் செயலா் பொய்கை மாரியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கிரிக்கெட் அணியினருக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள், ஏழை மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை , நலிவுற்ற பெண்களுக்கு நல உதவி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

மேலும், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட்சி கொடி ஏற்றி கோயில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டன. இதில், மாவட்ட அவைத் தலைவா் பெருமையா பாண்டியன், இணைச் செயலா் சுமதி கண்ணன், துணைச் செயலா் குமரேசன், சிறுபான்மை பிரிவுச் செயலா் கோதா்ஷா, இளைஞரணிச் செயலா் ராஜேஷ், ஒன்றியச் செயலா் பெரியதுரை, தென்காசி மேற்கு ஒன்றியச் செயலா்

வினோத், கடையநல்லூா் நகரச் செயலா் கமாலுதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →