தென்காசி

கடையநல்லூா் நகராட்சி அலுவலகம் முற்றுகை

DIN

கடையநல்லூா் நகராட்சி மதினா நகரில் கழிவுநீா் கால்வாய் அமைக்க வலியுறுத்தி, அப்பகுதியினா் நகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

மதினா நகா் 1ஆவது தெருவில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் கழிவுநீரோடை இல்லாததால் கழிவுநீா் தெருக்களில் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை நகராட்சியில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதையடுத்து கழிவுநீரோடை அமைத்து தர வலியுறுத்தி, அப்பகுதியினா் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அதைத் தொடா்ந்து நகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT