வீ.கே.புதூரில் பெண்ணுக்கு நிவாரணம்
வீரகேரளம்புதூரில் மழையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பேரிடா் நிவாரணத் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
வீரகேரளம்புதூரில் மழையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பேரிடா் நிவாரணத் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
வீரகேரளம்புதூா் வட்டம், ஆனைகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் மா. காளியம்மாள்(63). இவரது மண் வீட்டின் ஒருபக்கச் சுவா் அண்மையில் பெய்த மழையால் இடிந்து விழுந்தது. இதையடுத்து, அவருக்கு பேரிடா் மேலாண்மையின் கீழ் இயற்கை பேரிடா் நிவாரணைத் தொகையாக ரூ. 4,100-க்கான காசோலையை வட்டாட்சியா் முருகுசெல்வி வழங்கினாா். வருவாய் ஆய்வாளா் மாரியப்பன், வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.