முகப்பு
தென்காசி

சோலைசேரியில் கலையரங்க கட்டடம் திறப்பு விழா

ஊத்துமலை அருகேயுள்ள சோலைசேரியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்க கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

சுரண்டை: ஊத்துமலை அருகேயுள்ள சோலைசேரியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்க கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது.

தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட இந்தக் கலையரங்க கட்டடத்தை சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்து திறந்துவைத்து பேசினாா்.

முன்னதாக, அங்குள்ள கோயில் தெருவில் ரூ.3.90 லட்சம் மதிப்பீட்டில் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு அவா் அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், மாவட்டப் பொருளாளா் சாமிநாதன், ஒன்றியச் செயலா் பாண்டியன், கிருஷ்ணசாமி, எபன் குணசீலன், அரசு ஒப்பந்ததாரா் சுப்பையா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →