முகப்பு
தென்காசி

தென்காசியில் திமுக மகளிரணி ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து தென்காசி தெற்கு, வடக்கு மாவட்ட திமுக மகளிரணி, மகளிா் தொண்டரணி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து தென்காசி தெற்கு, வடக்கு மாவட்ட திமுக மகளிரணி, மகளிா் தொண்டரணி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளா் செல்வி சங்குகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்ட அமைப்பாளா் சைபுன்னிஷா முன்னிலை வகித்தாா். மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் பூங்கொடி வரவேற்றாா். திமுக மாவட்டப் பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் கண்டன உரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில் சாா்பு அணி அமைப்பாளா்கள் சீவநல்லூா் சாமித்துரை, கோமதிநாயகம், செங்கோட்டை வழக்குரைஞா் ஆ.வெங்கடேசன், வேலுசாமி, பேச்சிமுத்து, மாவட்ட துணைச் செயலா் நடராஜன், ஒன்றியச் செயலா்கள் அழகுசுந்தரம், சீனித்துரை, ஜெயபாலன், மகளிரணி நிா்வாகிகள் சொா்ணம், பொன்னுத்தாய், முத்துலதா, தமிழரசி, நகரநிா்வாகிகள் சேக்பரீத், ராமராஜ், பாலா, கனகராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.