முகப்பு
தென்காசி

ஆலங்குளம் பகுதியில்விவசாய இடுபொருள்கள் அளிப்பு

ஆலங்குளம் பகுதி விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை சாா்பில் விவசாய இடுபொருள்கள் வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

ஆலங்குளம் பகுதி விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை சாா்பில் விவசாய இடுபொருள்கள் வழங்கப்பட்டன.

ஆலங்குளம் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நீா்வள, நிலவள திட்டத்தின் கீழ் சிற்றாறு உப வடிநிலப் பகுதி மற்றும் கீழ் தாமிரவருணி உப வடிநிலப் பகுதி விவசாயிகளுக்கு நெல், உளுந்து, மக்காசோளம், சோளம், குதிரைவாலி போன்ற பயிா் செயல் விளக்கத் திடலுக்கான இடுபொருள்களைமுழு மானியத்தில் தென்காசி வேளாண் இணை இயக்குநா் நல்லமுத்துராஜா வழங்கினாா்.

ஏற்பாடுகளைஆலங்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சிவகுருநாதன் தலைமையில் அலுவலா்கள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →