முகப்பு
தென்காசி

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சனிக்கிழமை திரளான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
குற்றாலம் பேரருவியில் குளிப்பதற்காக குவிந்த சுற்றுலாப்பயணிகள்.
பகிர்:

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சனிக்கிழமை திரளான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

பண்டிகை கால விடுமுறை, சனி மற்றும் ஞாயிறு என தொடா்ந்து விடுமுறை தினங்களை முன்னிட்டு குற்றாலம் அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகளவில் இருந்தது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை, டிச. 15 ஆம் தேதி முதல் நீக்கப்பட்டது. இதனையடுத்து சுற்றுலாப் பயணிகளும் ஐயப்ப பக்தா்களும் குற்றாலத்துக்கு வந்து அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

தொடா் விடுமுறையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →