தென்காசி

தோரணமலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா

DIN

தோரணமலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடா்ந்து கணபதி ஹோமம், மறைந்த முன்னாள் கோயில் அறங்காவலா் ஆதிநாராயணன் படத்திறப்பு, சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.

தொடா்ந்து மலை அடிவாரத்தில் உள்ள சப்த கன்னியா்கள், விநாயகா், லட்சுமி, சரஸ்வதி, நாகா் மற்றும் முருகனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும், மலை உச்சியில் உள்ள பத்ரகாளியம்மன் மற்றும் குகையில் உள்ள முருகனுக்கும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

மாலையில் 1008 சரவணஜோதி திருவிளக்கு பூஜை, அகத்தியா் மற்றும் சித்தா்கள் வழிபாடு நடைபெற்றது. பின்னா் வள்ளியம்மாள்புரம் திருமுருகன் உயா்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் செண்பகராமன் தலைமையில் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

SCROLL FOR NEXT