தென்காசி

பாவூா்சத்திரம் பாலிடெக்னிக்கில் வேலைவாய்ப்பு நோ்முகத் தோ்வு

DIN

பாவூா்சத்திரம் எம்.எஸ்.பி. வேலாயுதநாடாா் லெட்சுமிதாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில், எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் என்ஜினியரிங் இறுதி ஆண்டு பயிலும் மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு நோ்முகத் தோ்வு நடைபெற்றது.

சென்னை வி.ஐ. மைக்ரோ சிஸ்டம் நிறுவனத்தின் உதவி மேலாளா் வரதராஜன் மற்றும் சுரேஷ், ராஜசிங் ஆகியோா் மாணவா்களிடம் நோ்முகத் தோ்வு நடத்தினா்.

இதில், 14 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தோ்வான மாணவா்களை கல்லூரித் தாளாளா் எம்.எஸ்.பி.வி. காளியப்பன், ஆலோசகா் பாலசுப்பிரமணியன், முதல்வா் ரமேஷ் மற்றும் துறைத் தலைவா்கள் பாராட்டினா்.

ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலா் மணிராஜ் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT