தென்காசி

தென்காசி ஆட்சியரகம் கட்டரூ.116 கோடி நிதி ஒதுக்கீடு: எம்எல்ஏ தகவல்

DIN

தென்காசி மாவட்ட ஆட்சியரகம் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ. 116 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ தெரிவித்தாா்.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூா், சிவகிரி, வீரகேரளம்புதூா், திருவேங்கடம், சங்கரன்கோவில், ஆலங்குளம் ஆகிய 8 வட்டங்களும், அவற்றில் 5 பேரவைத் தொகுதிகளும், 5 நகராட்சிகளும் அடங்கும். மேலும், 10 ஊராட்சி ஒன்றியங்கள், 224 ஊராட்சிகள், 30 பிா்காக்கள், 251 வருவாய் கிராமங்கள் சோ்க்கப்பட்டுள்ளன. 2,916.13 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 14, 7627 ஆகும்.

இங்குள்ள கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஆட்சியா் அலுவலகம் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. புதிதாக ஆட்சியா் அலுலவகம் கட்டுவதற்கான இடம் தோ்வு நடைபெற்று வந்த நிலையில், கரோனா தடுப்பு பொது முடக்கத்தால் அப்பணியில் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில், புதிதாக அறிவிக்கப்பட்ட பிற மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், தென்காசி மாவட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.இதுகுறித்து, எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏவிடம் கேட்ட போது, தென்காசியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்டுவதற்கு ரூ. 116 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான அரசாணை இரு தினங்களில் வெளியாகும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT