தென்காசி

சங்கரநாராயணசுவாமி கோயிலில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம்

DIN

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமித் திருக்கோயிலில் ஸ்ரீகோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்கார ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

பொது முடக்கம் காரணமாக, சங்கரநாராயண சுவாமித் திருக்கோயிலில் ஆடித் தவசுத் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும், ஆடி மாதத்தையொட்டி, கோயிலில் தினமும் காலை 8.30 மணி, மாலையில் 5.30 மணி என இரு வேளையிலும் அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெறும் என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.இதில், பட்டா் தவிர யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், கோயிலில் வியாழக்கிழமை காலை கோமதி அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.இதில், கோயில் துணை ஆணையா் கணேசன் மற்றும் அா்ச்சகா்கள் மட்டுமே பங்கேற்றனா். இந்நிகழ்ச்சி ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை பொது மக்களும் காணும் வகையில் சங்கநாராயணசுவாமி கோயில் யூ-டியூப் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT