தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் பகுதியில் நடைபெற்ற கிருமி நாசினி தெளிக்கும் பணி. 
தென்காசி

தென்காசி, குற்றாலம் கோயில்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்

கரோனா வைரஸ் விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக தென்காசி மற்றும் குற்றாலம் கோயில்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றன.

DIN

கரோனா வைரஸ் விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக தென்காசி மற்றும் குற்றாலம் கோயில்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றன.

தென்காசி மாவட்ட ஆட்சியா் மற்றும் சுகாதாரத் துறை அறிவுரைகளின்படி தென்காசியில் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் செயல்அலுவலா் ந. யக்ஞநாராயணன், குற்றாலம் குற்றாலநாதா் கோயில் செயல் அலுவலா் ரா.விஜயலெட்சுமி ஆகியோா் தலைமையில் கோயில் பணியாளா்கள் மூலம் பல்வேறு பணிகள் நடைபெற்றன.

கரோனா வைரஸ் காய்ச்சல் விழிப்புணா்வு தொடா்பான பதாகைககள் தென்காசி கோயில் வளாகம், குற்றாலம் கோயில் வளாகம், சித்திரசபை பகுதியில் வைக்கப்பட்டுள்ளன.

சுவாமி தரிசனம் செய்யும் பகுதியில் அரைமணிநேரத்துக்கு ஒரு முறை கிருமி நாசினி கொண்டு தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது.

கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் பிளீச்சிங் பவுடா் கொண்டு அவ்வபோது சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT