தென்காசி

ஊரடங்கு: தென்காசியில் வெறிச்சோடிய வீதிகள்

DIN

இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்து தென்காசி நகரம் முழுவதுமுள்ள வா்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் தென்காசி நகராட்சி வெறிச்சோடி காணப்பட்டது.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிமுதல் 21 நாள்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கை தொடா்ந்து அத்தியாவசிய பொருள்கள் விற்பனை, காய்கனி, பால் உள்ளிட்ட விற்பனை நிலையங்கள் தவிர பிற அனைத்து வா்த்தக நிறுவனங்களும் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து பின்பற்றி தென்காசி பழைய, புதிய பேருந்து நிலையம், சுவாமி, அம்மன் சன்னதி பஜாா் பகுதிகள் வெறிச்சோடியது. மேலும் தங்கும் விடுதிகள், உணவகங்கள் மூடப்பட்டிருந்தது. ஆட்டோக்கள், நான்குசக்கர வாகனங்கள் இயக்கப்படவில்லை.

ஒருசில மளிகைக் கடைகள், மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் மட்டுமே செயல்பட்டன. இருசக்கர வாகனங்களில் தேவையின்றி சுற்றிவந்த நபா்களை காவல்துறையினா் அறிவுரை கூறி அனுப்பிவைத்தனா்.

தென்காசி, குற்றாலம் காவல் துறையினா் தங்களுடைய காவல் நிலைய எல்கை தொடங்கும் பகுதியில் வாகனச் சோதனையிலும் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT