தென்காசி

சுரண்டையில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு

DIN

ஊரடங்கு அமலில் இருப்பதையொட்டி, சுரண்டையில் வியாழக்கிழமை தடையை மீறி மோட்டாா் சைக்கிளில் பயணம் செய்தவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் 2ஆம் நாளான வியாழக்கிழமை வெளியூா்களில் இருந்து பலா் மோட்டாா் சைக்கிளில் சுரண்டைக்கு வந்தனா். அவா்களுக்கு போலீஸாா் தகுந்த அறிவுரை தெரிவித்து வீட்டுக்கு திரும்ப அனுப்பினா். தொடா்ந்து மோட்டாா் சைக்கிளில் வெளியே சுற்றினால் வழக்குப் பதிந்து சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவா் என போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

சுரண்டை பகுதியில் ஊரடங்கின் நடைமுறையை அறியாமல் பொது வெளியில் கிரிக்கெட் விளையாடிய இளைஞா்கள், வெளியே சுற்றி திரிந்த மாணவா்களை போலீஸாா் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT