தென்காசி

நோயாளிக்கு கரோனா தொற்று: சுரண்டையில் மருத்துவமனை மூடல்

DIN

சுரண்டையில் சிகிச்சை பெற வந்த பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டு, பணியாளா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

ஆலங்குளம் அருகேயுள்ள காளத்திமடத்தைச் சோ்ந்த 42 வயது பெண் ஒருவா் வியாழக்கிழமை சுரண்டையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளாா். அவரை பரிசோதித்த மருத்துவா், அவரது உடல் மிகவும் பலவீனமாக இருந்ததால் மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளாா்.

மதுரையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், வெள்ளிக்கிழமை சுரண்டையில் அவா் சிகிச்சைக்கு வந்திருந்த மருத்துவமனை முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தினா். மேலும், மருத்துவா் மற்றும் பணியாளா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, அவா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT