முகப்பு
தென்காசி

‘மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்’

வீரகேரளம்புதூா் வட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

வீரகேரளம்புதூா் வட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் முருகச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வீரகேரளம்புதூா் வட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் தங்கள் அருகேயுள்ள இ -சேவை மையத்தின் மூலம் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி அடையாள அட்டையுடன், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருப்போா் விண்ணப்பிக்கலாம். வேறு ஏதும் உதவித்தொகை பெறுபவராக இருக்கக் கூடாது மற்றும் அரசு பணியில் இருக்கக் கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.