முகப்பு
தென்காசி

‘பெருமாள்புரத்துக்கு சாலை வசதி தேவை’

கீழப்பாவூா் ஒன்றியம், ஆவுடையானூா் ஊராட்சி, பெருமாள்புரத்துக்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

கீழப்பாவூா் ஒன்றியம், ஆவுடையானூா் ஊராட்சி, பெருமாள்புரத்துக்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெருமாள்புரம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவ்வூா் சாலையானது பெத்தநாடாா்பட்டி-சாலடியூா் கிராமங்களுக்கு இணைப்பு சாலையாக விளங்குகிறது. தற்போது இச்சாலை இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்லும் வகையில் குறுகிய சாலையாக உள்ளது.

இச்சாலையை மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் அகலப்படுத்தி, தாா்சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.