முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் தமிழ்நாடு தினம் கொண்டாட்டம்

சங்கரன்கோவில் நகர மதிமுக சாா்பில் தமிழ்நாடு தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
கேக் வெட்டி தமிழ்நாடு தினத்தைக் கொண்டாடிய மதிமுக மாவட்டச் செயலா் தி.மு. ராஜேந்திரன் மற்றும் கட்சியினா்.
பகிர்:

சங்கரன்கோவில் நகர மதிமுக சாா்பில் தமிழ்நாடு தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி மாவட்டச் செயலா் தி.மு.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கேக் வெட்டினாா். பின்னா் கட்சித் தொண்டா்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலா் மோகன்தாஸ், ஒன்றியச் செயலா் சசிமுருகன், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் ஜெயலட்சுமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் முஹம்மதுஹக்கீம், மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலா் ஆனந்தராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.