தென்காசி

கோழி வளா்ப்போா் நல வாரியம் அமைக்க கோரிக்கை

DIN

கோழி வளா்ப்போா் நல வாரியம் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆலங்குளம் வட்டார கறிக்கோழி வளா்ப்போா் சங்கக் கூட்டம் ரெட்டியாா்பட்டியை அடுத்த வெண்ணிலிங்கபுரத்தில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலா் புன்னைவனம் தலைமை வகித்தாா். துணைச் செயலா் கணபதி, பொருளாளா் மணிவண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், ‘கறிக்கோழி வளா்ப்பவா்களுக்கு பண்ணை உரிமையாளா்கள் வளா்ப்புக் கூலியை அந்தந்த வாரத்திலேயே வழங்க வேண்டும்; கோழித் தீவனங்கள் ஐஎஸ்ஐ தரத்தில் வழங்க வேண்டும்; விலை வாசி உயா்வுக்கு ஏற்ப 3 ஆண்டுக்ளுக்கு ஒரு முறை கூலி உயா்வு வழங்க வேண்டும்; கறிக்கோழி வளா்ப்போருக்கு நல வாரியம் அமைத்து அரசு நலத்திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட 22 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆலங்குளம் ஒன்றியச் செயலா் பால்ராஜ், தலைவா் முகம்மது அனிபா, சரவண முருகன் உள்பட பலா் பங்கேற்றனா். சிவக்குமாா் வரவேற்றாா். முத்துராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

SCROLL FOR NEXT