தென்காசி

சாம்பல் நீா் மேலாண்மை: முதன்மை மாவட்டமாக மாற்ற வேண்டும்: தென்காசி ஆட்சியா்

DIN

சாம்பல் நீா் மேலாண்மையில் முதன்மை மாவட்டமாக மாற்ற வேண்டும் என்றாா் தென்காசி ஆட்சியா் கீ.சு.சமீரன்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் சாம்பல் நீா் மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் தென்காசி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

முகாமுக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியது: சாம்பல் நீரை சுத்திகரிப்பு செய்து நிலத்தடி நீா்மட்டத்தை அதிகரிக்கச் செய்யலாம். விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க முடியும். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப நீரின் அவசியத்தை கருத்தில் கொண்டு சாம்பல் நீா் மேலாண்மையை திறம்பட செய்து முடித்து இம் மாவட்டத்தை முதன்மையானதாக்க வேண்டும் என்றாா் அவா்.

இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நா.சரவணன், செயற்பொறியாளா் கே.முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT