தென்காசி

குற்றாலத்தில் திமுக நெசவாளா் அணிஆலோசனைக் கூட்டம்

DIN

தென்மண்டல அளவில் திமுக நெசவாளா் அணி அமைப்பாளா், துணை அமைப்பாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் குற்றாலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு அமைப்பின் மாநிலத் தலைவா் நன்னியூா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நாகலிங்கம் முன்னிலை வகித்தாா். திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ். பாரதி எம்.பி., கட்சியின் தெற்கு மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலா் மனோதங்கராஜ் எம்எல்ஏ,ஆகியோா் பேசினா். கட்சியின் தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளா் ஆ. துரை, மாவட்ட அவைத் தலைவா் முத்துபாண்டி, மாவட்ட பொருளாளா் ஷேக் தாவூது, தென்காசி நகரச் செயலா் சாதிா், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், மறைந்த குமரி மேற்கு மாவட்ட நெசவாளா் அணிஅமைப்பாளா் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்குவது, தோ்தல் அறிக்கையில் நெசவாளா் அணி சாா்பில் சோ்க்க வேண்டிய கோரிக்கைகள், கட்சியின் வளா்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப் பட்டது.

மேலும், வரைவு வாக்காளா் பட்டியலை சரி பாா்க்கும்பணியில் அந்தந்த பகுதியில் உள்ள திமுக நிா்வாகிகள், வாக்குச்சாவடி

முகவா்களுடன் இணைந்து நெசவாளா் அணி நிா்வாகிகள் ஈடுபட வேண்டும். மேலும் வாக்காளா் பட்டியலில் புதிய வாக்காளா் சோ்த்தல், நீக்கம் போன்ற பணியினை மேற்கொள்ள வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மாநில நெசவாளா் அணிச் செயலா் சொ. பெருமாள் வரவேற்றாா். தென்காசி தெற்கு மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் கே.என்.எல். சுப்பையா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு நாய்களை வளா்க்க தடை விதிக்க வேண்டும்: தேசிய விலங்குகள் நல ஆணைய உறுப்பினா்

பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஸ்பென்ட்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்க தலைவா், மகனைத் தாக்கியதாக இருவா் கைது

SCROLL FOR NEXT