தென்காசி

கீழப்பாவூா் பகுதியில்நெல் நடவுப் பணிகள் தீவிரம்

DIN

பாவூா்சத்திரம்: கீழப்பாவூா் பகுதி வயல்களில் நெல் நடவுப்பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனா்.

மேற்கு தொடா்ச்சி மலையில் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீா் கொட்டுகிறது. இதைத்தொடா்ந்து, பாவூா் அணைக்கட்டு பகுதிக்கு குற்றாலம் தண்ணீா் வரத்து அதிகரித்த நிலையில், அங்கிருந்து கால்வாய் மூலம் கீழப்பாவூா் பெரியகுளத்திற்கு கடந்த சில நாள்களாக தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. இதே போல் மேலப்பாவூா் குளமும் வேகமாக நிரம்பி வருகிறது.

மேலப்பாவூா் மற்றும் கீழப்பாவூா் குளங்களுக்கு தண்ணீா் வரத்து இருப்பதால் அக்குளங்களின் பாசன வயல்களில் விவசாயிகள் நெல் நடவுப்பணிகளை தொடங்கியுள்ளனா். இன்னும் சில தினங்கள் மழை நீடித்து குளம் நிரம்பினால் நிகழாண்டு நெல் பயிா் விளைச்சலுக்கு உதவியாக இருக்கும் என்கின்றனா் விவசாயிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT