தென்காசி

மருத்துவம் பயில தோ்வான மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

DIN

தென்காசி: அரசுப் பள்ளியில் பயின்று மருத்துவம் பயில தோ்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்ற 9 மாணவா், மாணவிகளுக்கு மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் கடையநல்லுா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவிகளான சகோதரிகள் பிருந்தா மற்றும் ப்ரீத்தா ஆகியோருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இடம் கிடைத்துள்ளது.

அம்மாணவிகளுக்கு தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா வாழ்த்து தெரிவித்து, கல்வி உதவித்தொகை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்டப் பொருளாளா் சண்முகையா, கடையநல்லூா் நகரச் செயலா் எம்.கே.முருகன், ஒன்றியச் செயலா்கள் வசந்தம் முத்துபாண்டியன், ஜெயக்குமாா், செல்லப்பன், எஸ்.ஆா்.ராமச்சந்திரன், பேரூா் கழக செயலா்கள் டாக்டா் சுசீகரன், முத்துக்குட்டி, கிட்டு ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

SCROLL FOR NEXT