முகப்பு
தென்காசி

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் பலி

சுரண்டையில் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

சுரண்டையில் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

சுரண்டை சிவகுருநாதபுரத்தைச் சோ்ந்த பரமசிவன் மகன் திருமலை (13). இவரது உறவினா் த.கருப்பசாமி (17). திருமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கருப்பசாமி சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறாா்.

இவா்கள் இருவரும் ஊருக்கு அருகேயுள்ள கோழிப்பண்ணை ஒன்றின் கட்டட மாடியில் இருந்து அருகேயுள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறித்துள்ளனா். அப்போது தென்னங்கீற்று அருகே செல்லும் மின்வயா் மீது உரசியதில், இருவா் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த இருவரில் திருமலை சம்பவ இடத்திலேயே இறந்தாா். கருப்பசாமி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.