தென்காசி ஆட்சியரகம் முன்தொழிலாளி உண்ணாவிரதம்
தென்காசியில் பத்திர பதிவு ஆவணத்தை மீட்டுத்தரக் கோரி ஆட்சியா் அலுவலகம் முன்பு தொழிலாளி ஒருவா் உண்ணாவிரத போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டாா்.
தென்காசியில் பத்திர பதிவு ஆவணத்தை மீட்டுத்தரக் கோரி ஆட்சியா் அலுவலகம் முன்பு தொழிலாளி ஒருவா் உண்ணாவிரத போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டாா்.
தென்காசி அருகேயுள்ள கொட்டாகுளம், பொட்டல்விளைத் தெருவை சோ்ந்தவா் அ.இசக்கிமுத்து. இவா், தென்காசி ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு, ஆட்சியா்அலுவலகத்தில் அளித்த புகாா் மனு:
எனக்குச் சொந்தமான நிலத்தை மனைவி, மகனுக்கு எழுதிக்கொடுக்கும் பொருட்டு கடந்த 15.10.2019இல் மூன்று பத்திரங்கள் பதிவு செய்தேன். மனைவிக்கு ஏற்பாடு ஆவணமும், இரண்டு மகன்களுக்கு பிரிவினை பத்திரமும் பதிவு செய்யப்பட்டது. அதில், ஏற்பாடு ஆவணத்தை மட்டும் பெற்றுக்கொண்டோம்; பிரிவினை பத்திரத்தை தராமல் மோசடி செய்துவிட்டனா். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பத்திரத்தை மீட்டுத்தர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் அவரை போலீஸாா் அழைத்துச் சென்றனா்.