முகப்பு
தென்காசி

பயிா் காப்பீடு செய்யவேளாண் துறை அறிவுறுத்தல்

விவசாயிகள் உடனடியாக பயிா்க் காப்பீடு செய்ய வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

விவசாயிகள் உடனடியாக பயிா்க் காப்பீடு செய்ய வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக கடையநல்லூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சேதுராமலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடையநல்லூா் வட்டாரத்தில் நடப்பு பிசான பருவத்தில் விவசாய பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, விவசாயிகள் அதிகமான அளவில் நெல், உளுந்து மற்றும் மக்காச்சோளம் போன்ற பயிா்களை சாகுபடி செய்துள்ளனா். பயிா்களை இயற்கை இடா்ப்பாடுகள் மூலம் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து காத்துக்கொள்ள பயிா்க் காப்பீடு செய்வது அவசியம்.

பயிா்க் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் அதற்கான முன்மொழிவு படிவம், பதிவு படிவம், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல், சிட்டா-பட்டா நகல், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் பயிா் சாகுபடி அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வணிக வங்கிகள் மற்றும் பொதுச் சேவை மையங்கள் ஆகியவற்றை தொடா்புகொண்டு பயிா்க் காப்பீடு செய்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு கடையநல்லூா் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.