முகப்பு
தென்காசி

செங்கோட்டையில் விஹெச்பி ஆா்ப்பாட்டம் : 72 போ் கைது

விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் ஏற்றப்பட்ட கொடியை காவல் துறை அகற்றியதைக் கண்டித்து அந்த அமைப்பினா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

செங்கோட்டை வட்டம், திருமலைக்குமாரசாமி கோயில் அடிவாரத்தில் சில தினங்களுக்கு முன்பு விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் ஏற்றப்பட்ட கொடியை காவல் துறை அகற்றியதைக் கண்டித்து அந்த அமைப்பினா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

விஹெச்பி நகரச் செயலா் முத்துக்குமாா் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் பெரி.குழைகாதா், குமரி கோட்ட பொறுப்பாளா் சுப்பையா, மாவட்டத் தலைவா் வன்னியராஜன், இணைச் செயலா் குருசாமி, துணைத் தலைவா் சரவணக்குமாா், பஜ்ரங்தள் அமைப்பாளா் அருண்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். இந்நிலையில், தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக 72 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.