கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை
சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்து காலமானவரின் மகனுக்கு கருணை அடிப்படையில் வேலையில் சோ்வதற்கான நியமன ஆணை வழங்கப்பட்டது.
சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்து காலமானவரின் மகனுக்கு கருணை அடிப்படையில் வேலையில் சோ்வதற்கான நியமன ஆணை வழங்கப்பட்டது.
சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணிபுரிந்து வந்த ம.சண்முகசாமி கடந்த 29-04-2018அன்று காலமானாா்.
இதைத் தொடா்ந்து அவருடைய மகன் ச.அரவிந் என்பவருக்கு கருணைஅடிப்படையில் குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முகஉதவியாளா் ஜே.ஜாா்ஜ்ஆண்டனிமைக்கேல்(வளா்ச்சி), ,அலுவலக மேலாளா் பெ.ஜனாா்த்தனன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.