காந்தி ஜெயந்தி: நூற்றுக்கணக்கான காந்தி ஓவியங்களை தீட்டி அசத்திய மாணவர்கள்
கடையநல்லூரில் காந்தி ஜெயந்தியையொட்டி நூற்றுக்கணக்கான காந்தி ஓவியங்களை வரைந்து மாணவர்கள் அசத்தியுள்ளனர்.
கடையநல்லூரில் காந்தி ஜெயந்தியையொட்டி நூற்றுக்கணக்கான காந்தி ஓவியங்களை வரைந்து மாணவர்கள் அசத்தியுள்ளனர்.
கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் அன்னபூரணி. எம்சிஏ பட்டதாரியான இவர் ஓவியத்தின் மீது கொண்ட பற்றால் ஓவியம் கற்று தங்கள் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு ஓவியம் கற்றுக்கொடுத்து வருகிறார். அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்படுவதையொட்டி இவரிடம் ஓவியம் கற்கும் மாணவர்கள் ஸ்ரீசிவராமன், பிரேமலதா, மகாலட்சுமி ,கோகுல வரதன் ஆகியோர் கடந்த 3 நாள்களாக நூற்றுக்கணக்கான காந்தி ஓவியங்களை வரைந்துள்ளனர்.
இந்த ஓவியங்களை வெள்ளிக்கிழமை அப்பகுதி மாணவர்களிடம் விநியோகித்து காந்தி கொள்கைகளை எடுத்துரைத்தனர். இதற்கிடையே நூற்றுக்கணக்கான ஓவியங்களை வரைந்த மாணவர்களையும், பயிற்சி அளித்த ஆசிரியரையும் கௌரவிக்கும் வகையில் சத்ய உணர் தொண்டு அறக்கட்டளை மற்றும் சுழற் கழகம் சார்பில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவர் பரமசிவன் தலைமை வகித்தார். மேஜர் டோனர் பிரகாஷ் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். ரோட்டரி துணை ஆளுநர் கானித் செய்யது அகமது ,ரத்னா துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் அருட்செல்வன், ரோட்டரி முன்னாள் துணை ஆளுநர் ராஜு, முன்னாள் தலைவர்கள் மாரியப்பன், மோதிலால், சரவணன், வெள்ளத்துரை, வினோத், ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை, பிரகாஷ்., சாரதி, கோபி, கணேஷ் செய்திருந்தனர். முன்னதாக தலைமையாசிரியர் தங்கம் வரவேற்றார். சக்திவடிவு நன்றி கூறினார்.