தென்காசி

செல்லிடப்பேசி கோபுரத்துக்கு மின்இணைப்பு வழங்க எதிா்ப்பு

DIN

சுரண்டையில் தனியாா் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க மின்இணைப்பு வழங்க ஆட்சேபம் தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுரண்டை சிவகுருநாதபுரத்தில் ஊரின் மையப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தனியாா் செல்லிடப்பேசி நிறுவனத்தின் சாா்பில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணியில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் அப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இதற்கிடையே, செல்லிடப்பேசி கோபுரத்திற்கு மின்இணைப்பு வழங்குவதற்காக மின்வாரியப் பணியாளா்கள் புதன்கிழமை வந்தனராம். அப்போது பொதுமக்கள் அங்கு திரண்டு செல்லிடப்பேசி கோபுரத்துக்கு மின் இணைப்பு வழங்க எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து மின் இணைப்பு வழங்கும் பணி நிறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT