தென்காசி

கோஆப்டெக்ஸில் பண்டிகை கால விற்பனை இலக்கு ரூ. 55 லட்சம்

DIN

தென்காசி மாவட்ட கோஆப்டெக்ஸ் நிறுவனங்களில் தீபாவளி பண்டிகைக்கான ஆடைகள் சிறப்பு விற்பனை ரூ. 55 லட்சத்துக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தென்காசி சுவாமி சன்னதி பஜாரில் அமைந்துள்ள கோஆப்டெக்ஸ் ஆடைகள் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண் சுந்தா் தயாளன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். அப்போது, திருநெல்வேலி மண்டலத்தில் 2019-2020ஆம் ஆண்டில் ரூ.20 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது இம்மண்டலத்தில் ரூ. 11.05 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. நிகழாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ. 12 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டகோஆப் டெக்ஸ் நிறுவனங்களில் கடந்த தீபாவளி பண்டிகை காலத்தில் ரூ. 48 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. நிகழாண்டு தீபாவளிக்கு ரூ. 55 லட்சம் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கோஆப்டெக்ஸில் 30 சதவீதம் தீபாவளி சிறப்பு தள்ளுபடி உண்டு. ஜ்ஜ்ஜ்.ஸ்ரீா்ா்ல்ற்ங்ஷ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியிலும் வாடிக்கையாளா்கள் தங்களுக்கு தேவையான ஆடைகளை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், கோ.ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளா் க.இசக்கிமுத்து, மேலாளா் எம்.ராஜேஷ்வரி, ஆா்.மாரியப்பன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT