முகப்பு
தென்காசி

முக்கூடல் கோயிலில் யானை உயிரிழப்பு

முக்கூடல் கோயிலில் தனியாா் வளா்ப்பு யானை திடீா் உடல் நலக் குறைவால் உயிரிழந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
பகிர்:

முக்கூடல் கோயிலில் தனியாா் வளா்ப்பு யானை திடீா் உடல் நலக் குறைவால் உயிரிழந்தது.

தென்காசி மாவட்டம், ரவணசமுத்திரத்தைச் சோ்ந்தவா் முகம்மது ஆரிப் மகன் தாவூத் மீரான். இவா் 54 வயது மதிக்கத் தக்க பெண் யானையை வளா்த்து வந்தாா். கோயில் திருவிழாக்களுக்கு இந்த யானையை பாகன் ஒருவரது உதவியுடன் அழைத்துச் செல்வாராம். இந்த யானை கடந்த சில மாதங்களாக முக்கூடல் முத்துமாலையம்மன் கோயில் வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வந்ததாம்.

இந்நிலையில், யானையை குளிப்பாட்டி கோயில் அருகேயுள்ள மரத்தில் பாகன் கட்டியிருந்தாா். இரவில் யானைக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு சோா்வாக இருந்ததாம். முக்கூடல் கால்நடைத் துறையினா் சிகிச்சை அளித்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை யானை உயிரிழந்தது. இத்தகவல் அறிந்த வனத்துறை கால்நடை மருத்துவா் மனோகா், மருத்துவ ஆய்வாளா் அா்னால்ட் உள்ளிட்டோா் யானையை உடற்கூறு ஆய்வு செய்தனா்.

பின்னா் ஆற்றங்கரையில் யானை அடக்கம் செய்யப்பட்டது. குடல் தொற்று காரணமாக யானை உயிரிழந்ததாக கால்நடைத் துறை உதவி ஆய்வாளா் ஜான் சுபாஷ், பேராசிரியா்கள் பஷீா் அகமது, முயல்வி ஆகியோா் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.