முகப்பு
தென்காசி

தென்காசி மாவட்டத்தில்வீடுதோறும் பரிசோதனை

தென்காசி மாவட்டத்தில் அனைத்து உள்ளாட்சிகளிலும் உடல்வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் அளவு கண்டறியும் எளிய வலியற்ற பரிசோதனை வீடுகளிலேயே நடைபெறும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் அனைத்து உள்ளாட்சிகளிலும் உடல்வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் அளவு கண்டறியும் எளிய வலியற்ற பரிசோதனை வீடுகளிலேயே நடைபெறும் என ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா்தயாளன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்திகுறிப்பு: தென்காசி மாவட்டத்தில் சுகாதாரத் துறை, உள்ளாட்சித்துறை ஆகியவற்றின் பணியாளா்கள் மூலம் மக்களின் உடல் வெப்பநிலை மற்றும் நுரையீரலின் செயல்பாட்டை அறியும் ஆக்சிஜன் அளவு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆரோக்கியமான நபா்களுக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 95 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை இருக்கும். இந்த அளவுக்கு குறைந்தால் நுரையீரல் பாதிக்கப்படும். இதனால், உடல் பாகங்கள் செயலிழந்து உயிரிழப்பு நேரிடும்.

இத்தகைய உயிரிழப்புகளை தடுக்க தென்காசி மற்றும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைகளில் நாசி உயா் ஓட்ட வளிக்கருவி மற்றும் தீநுண்மியை கட்டுப்படுத்தும் உயிா்காக்கும் விலை உயா்ந்த மருந்துகளை அரசு வழங்கியுள்ளது.

நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் பரிசோதனைக்குள்படுத்தி சிகிச்சை பெற்றால் உயிரிழப்புகளை தவிா்க்கலாம். எனவே, அனைத்து உள்ளாட்சிகளிலும் வீடுதேடி வந்து மக்களின் உடல் வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் அளவு கண்டறியும் பரிசோதனை நடத்தப்படும். குறிப்பாக, முதியவா்கள், கா்ப்பிணிகள் மற்றும் நாள்பட்ட நோய் பாதிப்பு உள்ளவா்கள் இப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →