தென்காசி

புளியங்குடி அருகே ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே 11 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

புளியங்குடியில் இருந்து நாகா்கோவிலுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, துணை வட்டாட்சியா் ஞானசேகரன், கிராம நிா்வாக அதிகாரி சின்னச்சாமி, வருவாய்த் துறை அதிகாரிகள் தென்காசி- சங்கரன்கோவில் பிரதானச் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது நிற்காமல் சென்ற லாரியை வருவாய்த் துறை அதிகாரிகள் மடக்கி பிடித்து சோதனையிட்டனா். லாரியில் 11 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. லாரி ஓட்டுநா் உள்ளிட்ட சிலா் தப்பி ஓடிவிட்டனா். லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த வருவாய்த் துறை அதிகாரிகள், அவற்றை புளியங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT