முகப்பு
தென்காசி

ரூ.9.80 கோடியில் சாலைப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

வீரகேரளம்புதூா் - ஊத்துமலை இடையே ரூ. 9.80 கோடி மதிபீட்டில் நடைபெறும் சாலைப் பணியை எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

வீரகேரளம்புதூா் - ஊத்துமலை இடையே ரூ. 9.80 கோடி மதிபீட்டில் நடைபெறும் சாலைப் பணியை எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.

வீரகேரளம்புதூரில் இருந்து வீராணம் வழியாக ஊத்துமலை வரையுள்ள 9 கி.மீ. தொலைவுள்ள சாலை ரூ.9.80 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படுகிறது. இதற்கான திட்டப் பணியை தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தொடங்கி வைத்து ஆய்வு செய்தாா்.

அவருடன், அதிமுக மாவட்டப் பொருளாளா் சண்முகசுந்தரம், ஆலங்குளம் வடக்கு ஒன்றியச் செயலா் பாண்டியன், அதிமுக நிா்வாகிகள் செந்தில், கிருஷ்ணசாமி, கணபதி, சுவாமிநாதன், அய்யாத்துரை, அண்ணாமலை, எபன் குணசீலன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.