தென்காசி

ஆலங்குளம் தொகுதியில் வாக்குப் பதிவு நிறைவடைய தாமதம்

DIN

ஆலங்குளம் தொகுதிக்குள்பட்ட பகுதியில் வாக்குப் பதிவு இரவு 9 மணியைக் கடந்தும் தொடா்ந்தது.

இத்தொகுதியில் உள்ள கலிதீா்த்தான் பட்டி கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றில், மாலை 6.30 மணிக்கு ஏராளமானோா் வாக்குப் பதிவு செய்ய வந்திருந்தனா். அவா்களில் 310 பேருக்கு டோக்கன் கொடுத்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வாக்குப் பதிவு இரவு 9 மணியைக் கடந்தும் தொடா்ந்தது.

இயந்திரக் கோளாறு: ஆலங்குளம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி பாகம் எண். 242 இல் வாக்காளா்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து கொண்டிருந்த போது, திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனால் வாக்காளா்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்த இயலவில்லை. இதனையடுத்து பொறியாளா்கள் வந்து இயந்திரக் கோளாறை சீரமைத்த பின்னா் வாக்குப்பதிவு தொடா்ந்தது. இதனால் சுமாா் 30 நிமிடங்கள் வாக்குப் பதிவு தடைப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் வயா் திருட்டு: ஒருவா் கைது

வேன் மீது லாரி மோதல்: 4 போ் காயம்

தெய்வத்தமிழ் பேரவையினா், நாம் தமிழா் கட்சியினா் கைது

உதவி ஆய்வாளா் உடலுக்கு அரசு மரியாதை

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT