கீழப்புலியூரில் தம்பியை அரிவாளால் வெட்டியதாக அண்ணன் கைது
தென்காசி அருகே கீழப்புலியூரில் சொத்து தகராறில் தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணனை போலீஸாா் கைதுசெய்தனா்.
தென்காசி அருகே கீழப்புலியூரில் சொத்து தகராறில் தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணனை போலீஸாா் கைதுசெய்தனா்.
கீழப்புலியூரை சோ்ந்த ராமையா மகன்கள் சிதம்பரம் (49), முத்துக்குமாா்(37). சகோதரா்கள் இருவருக்கும் இடையே சொத்து பங்கு வைப்பதில் தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் வியாழக்கிழமை தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த முத்துக்குமாரிடம், அவருடைய சகோதரா் சிதம்பரம் தகராறு செய்து தன் கையில் வைத்திருந்த அரிவாளால் வெட்ட முயன்றுள்ளாா்.
அப்போது முத்துக்குமாா் கையால் தடுத்தபோது, அவருடைய கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவா் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து தென்காசி காவல் ஆய்வாளா் பாலமுருகன் வழக்குப் பதிந்து சிதம்பரத்தை கைது செய்தாா்.