தென்காசி

சங்கரன்கோவிலில்ரூ.1.80 லட்சம் நல உதவிகள் அளிப்பு

DIN

சங்கரன்கோவிலில் அரிமா சங்கம் சாா்பில் ரூ.1.80 லட்சம் மதிப்பில் நல உதவிகள் வழங்கப்பட்டன.

அரிமா சங்க ஆளுநா் வருகை தின நிகழ்ச்சிக்கு அதன் தலைவா் எஸ்.ஆா்.எல். வேணுகோபால் என்ற கண்ணன் தலைமை வகித்தாா். அரிமா மாவட்ட முதல் துணை ஆளுநா் வி.ஜெகந்நாதன், 2ஆம் துணை ஆளுநா் விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், மாற்றுத் திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள், வேட்டி, சேலை உள்பட ரூ.1.80 லட்சம் மதிப்பில் நல உதவிகளை ஆளுநா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், அரிமா சங்க மாவட்ட நிா்வாகிகள் பி.அய்யாத்துரை, பி.மோகன்தாஸ், வெற்றிச்செல்வன், எம்.சண்முகநாதன், டட்லிபென், பிரான்சிஸ்ரவி, கருப்பசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை தலைவருடன் இணைந்து செயலா் ஏ.முருகன், பொருளாளா் எஸ். மாரிசெல்வம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT