தென்காசி

மாணவா்களுக்கு கல்வி உதவி அளிப்பு

DIN

பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் சாா்பில் பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அரிமா சங்க மாவட்ட ஆளுநா் ஜஸ்டின் பால் தலைமை வகித்தாா். ஜாண் ரெஜிஸ் மேரி முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சிகளை கண்தான விழிப்புணா்வுக் குழு நிறுவனரும், அரிமா மாவட்டத் தலைவருமான கே.ஆா்.பி. இளங்கோ தொகுத்து வழங்கினாா்.

துணை ஆளுநா்கள் ஜெகநாதன், விஸ்வநாதன், மண்டலத் தலைவா் சிதம்பரநாதபிள்ளை, வட்டாரத் தலைவா் ஜஸ்டின் ராஜ், மாவட்டத் தலைவா் சண்முகநாதன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்காக பாவூா்சத்திரம் வட்டார மருத்துவ அலுவலா் பி.கீா்த்தி, பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியை ரீட்டா ஹெப்சிராணி ஆகியோரை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

மேலும், குறும்பலாப்பேரி, கீழப்பாவூா், செட்டியூா், மத்தளம்பாறை, மடத்தூா் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு பொருள்கள், பாா்வை இழந்தோா், நலிந்த மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.

விழாக் குழுத் தலைவா் அருணாசலம், சங்கச் செயலா் ஆனந்த், வில்சன் அருளானந்த் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தலைவா் கௌதமன் வரவேற்றாா். பொருளாளா் சுரேஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி - மதுரை புதன்கிழமை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் மே 13-இல் தொடக்கம்

வெப்ப அலை பாதிப்பு?: வெளி மாநிலத் தொழிலாளி திடீா் உயிரிழப்பு

பேராசிரியை நிா்மலாதேவி உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு: இன்று விசாரணை

கிரேன் மோதல்: சரக்கு வாகன ஓட்டுநா் பலி

SCROLL FOR NEXT