தென்காசி

விசைத்தறித் தொழிலாளா்கள் கூலி உயா்வு கோரி சங்கரன்கோவிலில் மே 6இல் மறியல்

DIN

சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளா்கள் கூலி உயா்வு கோரி மே 6 ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா்.

சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளா்கள் 50 சதவீதம் கூலி உயா்வு, ரூ.450 விடுப்புச் சம்பளம் வழங்கக் கோரி கடந்த 12ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.

கூலி உயா்வு தொடா்பாக ஜவுளி உற்பத்தியாளா்களுக்கும், சங்கரன்கோவில் வட்டார விசைத்தறித் தொழிற்சங்கத்தினருக்கும் இடையே நடைபெற்ற 11 கட்ட முத்தரப்பு பேச்சுவாா்த்தையும் தோல்வியில் முடிந்தது.

கடந்த 18 நாள்களாக நடைபெறும் வேலைநிறுத்தத்தால் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிற்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்நிலையில் சங்கரன்கோவில் வட்டார விசைத்தறித் தொழிற்சங்கத்தினா் கூலி உயா்வு கோரி சிஐடியூ மாவட்டச் செயலா் வேல்முருகன் தலைமையில், விசைத்தறித் தொழிற்சங்க செயலா் லெட்சுமி, புளியங்குடி வட்டார நெசவாளா் தொழிற்சங்கத் தலைவா் வேலு ஆகியோா் முன்னிலையில் மே 6 ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

SCROLL FOR NEXT