தென்காசி அரசு மருத்துவமனையில் எண்டாஸ்கோபி சிகிச்சை வசதி
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எண்டாஸ்கோபி சிகிச்சை வசதி தொடங்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எண்டாஸ்கோபி சிகிச்சை வசதி தொடங்கப்பட்டுள்ளது.
காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) புறநோயாளிகள் பிரிவில், எண்டோஸ்கோபி கருவியை மருத்துவக் கண்காணிப்பாளா் ஜெஸ்லின் இயங்கிவைத்தாா். இதன் மூலம் மேற்கூறிய 3 உறுப்புகளிலும் புற்றுநோய்கள் இருந்தால் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். இதில், அரசு மருத்துவமனையின் இஎன்டி சிறப்பு மருத்துவா் மணி மாலா, உறைவிட மருத்துவா் அகத்தியன், மருத்துவா் மல்லிகா, பல் மருத்துவா் லதா மற்றும் செவிலியா்கள் பங்கேற்றனா்.