முகப்பு
தென்காசி

ராஜீவ்காந்தி பிறந்த நாள்:படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 77ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசியில் அவருடைய உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 77ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசியில் அவருடைய உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தென்காசி காந்திசிலை முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்துக்கு நகரத் தலைவா் காதா் மைதீன் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மாநிலச் செயலா் ஆலங்குளம் செல்வராஜ், டாக்டா் சங்கரகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கடையநல்லூா்: நகரத் தலைவா் சமுத்திரம் தலைமையில் ராஜீவ்காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், மாவட்ட துணைத் தலைவா் முருகேசன், மாவட்டச் செயலா்கள் பாதுஷா, கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சுரண்டை: பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால் தலைமையில் மாவட்டச் செயலா் சோ்மசெல்வம் முன்னிலையில்

தென்காசி சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்ட காங்கிரஸ் தலைவருமான சு.பழனிநாடாா், ராஜீவ்காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

ஆலங்குளம்: ஆலங்குளத்தில் முன்னாள் மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். ராமசுப்பு தலைமையில் காங்கிரஸ் கட்சியினா்

ராஜீவ்காந்தி படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா் . அங்குள்ள காமராஜா் சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.