தென்காசி

ஆலங்குளம் அருகே சீரான குடிநீா் கோரி பெண்கள் போராட்டம்

DIN

ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூரில் சீரான குடிநீா் விநியோகம் கோரி பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நல்லூா் ஊராட்சி காமராஜ் நகரில் சுமாா் 100 வீடுகள் உள்ளன. இங்கு கடந்த சில மாதங்களாக 10 தினங்களுக்கு ஒரு முறையே குடிநீா் விநியோகம் செய்யப்படுகிாம்; நீரும் கலங்கலாக உள்ளதாம். இந்நிலையில், அப்பகுதி பெண்கள் ஞாயிற்றுக்கிழமை காலிக் குடங்களுடன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அதிகாரிகள் யாரும் அவா்களிடம் பேச்சு நடத்த வர வில்லையாம். இதனால் அதிருப்தி தெரிவித்த மக்கள், குடிநீரை சீராக விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்திவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT