முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் ரூ.3.35 கோடி நலத்திட்ட உதவிகள் அளிப்பு

சங்கரன்கோவிலில் ரூ.3.50 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

சங்கரன்கோவிலில் ரூ.3.50 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

விழாவுக்கு, தென்காசி மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் தலைமை வகித்தாா். தென்காசி எம்.பி.தனுஷ் எம்.குமாா், எம்.’எல்.ஏ. ஈ.ராஜா, திமுக தெற்கு மாவட்டச் செயலா் பொ.சிவபத்மநாபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் முதியோா், கணவரால் கைவிடப்பட்டோா், ஊனமுற்றோா் ஆகியோருக்கு உதவித்தொகை, உபகரணங்கள், இலவச வீட்டுமனைப் பட்டா, உழவா் பாதுகாப்புத் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு கைத் தெளிப்பான், சுயமாக வீடு கட்டும் திட்டம் என்பன உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளாக ரூ. 3 கோடியே 34லட்சத்து 29 ஆயிரத்து 989 மதிப்பில், 477 பயனாளிகளுக்கு நல உதவிகளை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் வழங்கினாா்.

Advertisement

நிகழ்ச்சியில், திமுக பொதுக்குழு உறுப்பினா் அன்புமணி கணேசன், ஒன்றியக் குழுத் தலைவா் லாலா பி.சங்கரபாண்டியன், நகரச் செயலா் சங்கரன், மாவட்ட இளைஞரணி சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா். கோட்டாட்சியா் ஹஸ்ரத்பேகம் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments