தென்காசி

சங்கரநாராயணசுவாமி கோயிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை

DIN

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

இக்கோயிலில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் ஆகியவை நடைபெற்றது. இதில், சங்கரன்கோவில் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்தும், திருநெல்வேலி, ராஜபாளையம், புளியங்குடி, சுரண்டை , கோவில்பட்டி, திருவேங்கடம் உள்ளிட்ட பல்வேறு

பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கோயிலுக்கு அதிகாலையில் இருந்தே வந்த வண்ணம் இருந்தனா்.

சங்கரலிங்கசுவாமி சன்னதி, கோமதி அம்பாள் சன்னதி, சங்கரநாராயணா் சன்னதிகளில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையா் கணேசன், கோயில் ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT