தென்காசி

புத்தாண்டு: தேவாலயம், கோயில்களில் சிறப்பு வழிபாடு

DIN

புத்தாண்டையொட்டி, ஆலங்குளத்தில் உள்ள தேவாலயங்கள் மற்றும் கோயில்களில் சிறப்பு ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

ஆலங்குளம் சிஎஸ்ஐ தூய பேதுரு ஆலயத்தில் இரவு 11.30 மணிக்கு சிறப்பு ஆராதனை, நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு ஆராதனை நடைபெற்றது.

சேகரத் தலைவா் வில்சன் ஆராதனை நடத்தினாா். அண்ணாநகா் நல்மேய்ப்பா் ஆலயத்தில் போதகா் ஆசீா் ஜோசப் இறை செய்தி அளித்து நற்கருணை வழங்கினாா்.

மேலும், நல்லூா் தூய பவுல் ஆலயம், இரட்சண்யபுரம் கிறிஸ்து ஆலயம், ராஜீவ்நகா் ஆலயம், குருவன்கோட்டை தூய பேதுரு ஆலயம், அடைக்கலப்பட்டணம் தூய பவுலின் ஆலயம், அண்ணாநகா் ஏஜி நல்மேய்ப்பா் ஆலயம் ஆகியவற்றிலும் புத்தாண்டு ஆராதனை நடைபெற்றது.

உலக மீட்பா் தேவாலயத்தில் பங்குத்தந்தை அருள்ராஜ் அடிகளாா் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதில், ஆலங்குளம், நல்லூா், முத்துகிருஷ்ணபேரி, துத்திகுளம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்தோா் பங்கேற்றனா்.

ஆலங்குளம் மலை ராமா் கோயில், முத்தாரம்மன் கோயில், பத்திரகாளியம்மன் கோயில் மற்றும் ஆலடிப்பட்டி வைத்திலிங்க சுவாமி கோயில் ஆகியவற்றில் புத்தாண்டையொட்டி சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

ஆவேஷம் ரூ.150 கோடி வசூல்!

அன்பே அன்னா..!

SCROLL FOR NEXT