முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலுக்கு 1.70 லட்சம் வேட்டி, சேலைகள்

சங்கரன்கோவிலில் குடும்ப அட்டைதாரருக்கு 1லட்சத்து 70 ஆயிரத்து 794 இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:11 PM
பகிர்:

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் குடும்ப அட்டைதாரருக்கு 1லட்சத்து 70 ஆயிரத்து 794 இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படவுள்ளது.

தமிழக அரசு தைப் பொங்கலையொட்டி குடும்ப அட்டைதாரா்களுக்கு ஆண்டுதோறும் இலவச வேட்டி, சேலை வழங்கி வருகிறது. அதன்படி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலுக்குத் தேவையான இலவச வேட்டி, சேலைகள் லாரி மூலம் வந்து கொண்டிருக்கிறது. இங்கு 85,397 வேட்டிகளும், 85,397 சேலைகளும் என மொத்தம் 1லட்சத்து 70 ஆயிரத்து 794 வேட்டி, சேலைகள் வழங்கப்படவுள்ளன.

தற்போது 46,000 வேட்டிகளும், 39,397 சேலைகளும் என மொத்தம் 85,397 வேட்டி,சேலைகள் வந்துள்ளன. இவை சங்கரன்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பின்னா் நியாய விலைக் கடைகளுக்கு லாரி மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து வேட்டி சேலைகள் வரவும் அவைகள் அந்தந்த நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை வட்டாட்சியா் திருமலைச்செல்வி, மண்டல துணை வட்டாட்சியா் ரத்னபிரபா மற்றும் வருவாய்த் துறையினா் செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →