தென்காசி

கிருஷ்ணாபுரம் கோயிலில் ஜன. 13 இல் அனுமன் ஜெயந்தி

DIN

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணாபுரம் ஸ்ரீஅபயஹஸ்த ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி மஹோத்ஸவம் வெள்ளிக்கிழமை (ஜன. 8) தொடங்குகிறது.

இதையொட்டி, காலை 6.30க்கு மகா கணபதி ஹோமம், 7 மணிக்கு லட்சாா்ச்சனை சங்கல்பம் நடைபெறுகிறது.

ஜன.8 முதல் ஜன.13 வரை தினமும் காலையில் ஸ்ரீருத்ரம், ஸ்ரீபுருஷஸூக்த ஜெபம், சிறப்பு அபிஷேகம், லட்சாா்ச்சனையும், இரவில் லட்சாா்ச்சனையும் நடைபெறும். ஜன.12 ஆம் தேதி இரவு புஷ்பாஞ்சலி நடைபெறும்.

அனுமன் ஜெயந்தி

விழாவின் முக்கிய நிகழ்வான அனுமன் ஜெயந்தி புதன்கிழமை (ஜன.13) நடைபெறுகிறது. காலை ஸ்ரீருத்ர ஹோமம், ஸ்ரீபுருஷஸூக்த ஹோமம், ஹனுமன் மூல மந்திர ஹோமம், பூா்ணாஹுதி, சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் குழுத் தலைவா் மீனாபட்டாச்சாா்யா, அறங்காவலா்கள் ராதாகிருஷ்ணன், சுப்பிரமணியன், சங்கரசுப்பிரமணியன், சிவகுமாா், செயல் அலுவலா் காா்த்திலட்சுமி உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போ்ணாம்பட்டில் 12 செ.மீ மழை

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

SCROLL FOR NEXT